• தீபம் - ஆன்மீகம்

நிறம் மாறும் அதிசய விநாயகர்!


- ப்ரவீணா அருண்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கேரளபுரம் என்ற ஊரில் உள்ளது நிறம் மாறும் விநாயகர் கோயில். இக்கோயிலில் அருள்பாலிக் கும் விநாயகர் ஆறு மாதம் வெள்ளையாகவும், ஆறு மாதம் கருப்பாகவும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்!

தை முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தில் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கும் இந்த அதிசய விநாயகரை, இத்தலத்தின் ஒரு அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்தது திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா!

ஆரம்பத்தில் அரை அடி உயரமே இருந்த இந்த விநாயகர் விக்ரகம், தற்போது ஒன்றரை அடி உயரம் வரை வளர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரின் நிறத்தைப் பொறுத்து, இக்கோயிலின் அரச மரமும் நிறம் மாறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருப்பு, வெள்ளை நிறம் காட்டி அருள்பாலிக்கும் இந்த கணபதியை இவ்வூர் மக்கள், ‘நிறம் மாறும் விநாயகர்’ என்றே அழைக்கின்றனர்.

ஆடி மாதம் தொடங்கும்போது இந்தப் பிள்ளையாரின் தலை உச்சியிலி ருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்குகிறதாம். அதேபோல், தை மாதம் தொடங்குகையில் மெல்ல மெல்ல பாதம் கறுக்கத் தொடங்கு கிறது. ஆறு மாதங்கள் வரை வெள்ளை நிறம் அப்படியே இருக்கும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

வியப்பான தகவல்...

ஆா்.நாகராஜன் says :

அற்புதமாக உள்ளது படிக்கும்போதே சிலிா்க்கிறது விநாயகரே துணை

எம். வசந்தா. says :

பார்க்க ஆவலை தூண்டியது

Ganapathy latha says :

தகவல்கள் ஜோர்.ஆனால் ஆரம்பித்தது போல் தகவல் இல்லாமல் முடியும் போது மாறியிருக்கிறது.கவனிக்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :