• JUST IN | சுட சுட

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு திடீர் உடல் நலக்குறைவு : ம்ருத்துவமனையில் அனுமதி!





அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இயல்பாக சுவாசிக்க சிரமப்படும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், செய்தியறிந்து அப்போலோ விரைந்தார்.

அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். சசிகலாவிற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலகட்டத்தில் அவருக்கு ஆதரவளித்த முக்கியத் தலைவர்களில் மதுசூதனனும் ஒருவர். அப்போது ரத்து செய்யப்பட்ட அருகே நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டவரும் மதுசூதனன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :