• JUST IN | சுட சுட

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?





சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் உயர்ந்தால் மறுநாளே குறையும் நிலையிலேயே நீடிக்கிறது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் பெரிதாக மாற்றங்கள் இருக்கவில்லை. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,566க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,528க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,300க்கும் விற்பனையாகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :