• JUST IN | சுட சுட

500 ரூபாயில் அசத்தல் திருமணம்!





மத்தியப்பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவரும், மாஜிஸ்திரேட்டும் வெறும் 500 ரூபாய் செலவில் தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

திருமணத்திற்காக பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்யும் காலத்தில், இன்னும் பலர் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையில், ஒரு ஜோடி வெறும் 500 ரூபாயில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அங்கித் சதுர்வேதி இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது லடாக் பகுதியில் பணியில் இருக்கிறார். இவருக்கும் போபால் பகுதியைச் சேர்ந்த சிவாங்கி ஜோஷ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. சிவாங்கி ஜோஷ் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார்

தம்பதிகள் இருவரும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்வதற்குள் கொரோனா வந்துவிட்டது . கொரோனா முடிந்ததும் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என காத்திருந்தனர்.

ஆனால் கொரோனா முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இதையடுத்து இருவரும் சிம்பிளாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரின் முன்னிலையில் வெறும் 500 ரூபாய் செலவில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதி பின்பு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :