• தினம் ஒரு ஜூஸ்

பஞ்சரத பூ ஜுஸ்


நளினி சுந்தர ராஜன், சென்னை.

தேவையானவை:

வெண்தாமரைப்பூ-10

செந்தாமரைப்பூ-10

செம்பருத்திப்பூ-10

ரோஜா இதழ்-100 கிராம்

மகிழம்பூ-சிறிது

சர்க்கரை-அரைக் கிலோ

தண்ணீர்- ஒன்றை லிட்டர்

பால்-கால்‌கப்

சிவப்புக்கலர்-சிறிதளவு

செய்முறை:

ஒரு லிட்டர் தண்ணீரில் எல்லா பூக்களையும் அலசிவிட்டு, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது அரை லிட்டராக ஆகும் வரை கொதிக்கவிடவும்.ஆறியப்பின் வடிக்கவும்.

அரை லிட்டர் தண்ணீரில் சர்க்கரையையும் பாலையும்‌சேர்த்து‌கொதிக்க விட்டு அழுக்கு நீக்கவும்.அதில் சிகப்பு கலர் சேர்க்கவும் இத்துடன் பூ ஜுஸைக் கொட்டி பிசுக்குப்பதத்தில் காய்ச்சிஇறக்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து பருகலாம். சுவையான "பஞ்சரத பூ ஜுஸ்" ரெடி.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

புதுமையான ஜூஸ்... ஆனால் இவ்வளவு பூக்களையும் தேடி கண்டு பிடிக்க வேண்டுமே......

Ghandhi says :

Nice

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :