• தினம் ஒரு ஜூஸ்

பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி


கவிதாபாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

தேவையானவை:

கிளி மூக்கு மாங்காய் - ஒன்று

இஞ்சி - ஒரு துண்டு

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில், மாங்காயை சுத்தமாக கழுவி, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த மாங்காய் சாற்றுடன், தோல் நீக்கிய இஞ்சி துண்டு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். இஞ்சி சாறு முழுவதும் இறங்கியதும் இஞ்சியை வெளியில் எடுக்கவும்.

மாங்காய் சாரில் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் புதினா சேர்த்துக் கொள்ளலாம். அவ்ளோதாங்க.. புது சுவையில் பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி ரெடி.!

Comments

ராமகிருஷ்ணன். says :

புதுமையான ரெசிபி நன்றி மங்கையர் மலருக்கு

தனுஜாஜெயராமன் says :

அருமை...மாங்காய் ஜூஸ் புதுமையாக இருக்கிறது . வீட்டில் செய்து பார்க்க வேண்டும். நன்றி திருமதி. கவிதா.

Anandan says :

சூப்பர் நன்றி

பாலசுப்பிரமணியன். சிதம்பரநாதன்பேட்டை says :

மாங்காய் ரெசிபி... அடடே செமையா இருக்கும் போல இன்னைக்கே செஞ்சு பார்த்துக்கணும்

Udayakumar says :

பச்சை மாங்காய் வாங்க கடைக்கு சென்று கொண்டிருக்கிறேன்

தமிழ்வாணன்.புதுப்பூலாமேடு says :

பச்சை மாங்காய்வில் ஜூஸ்...... அட இது புதுசா இருக்கே..... புதுமை என்றாலே மங்கையர்மலர் தானே..... பாராட்டுக்கள்.

Jaya Lakshmi says :

மாங்காய் ஜூஸ் ரெசிபி சூப்பர்

சங்கரநாராயணன் says :

பச்சை மாங்காய் ஜூஸ்அருமை. .வாழ்த்துக்கள் !நன்றி!!

Vijayalakshmi says :

அருமையான ரெசிபி மங்கையர் மலருக்கு மிக்க நன்றி

SANKAR says :

பச்சை மாங்காய் ஜூஸ் இது புதுசா இருக்கு முயற்சி செய்து பார்ப்போம்

வீ.முருகன் says :

அடடே புதுவகையான ரசபியா இருக்கே..... செய்து சாப்பிட்டு பார்க்கணும், ரசபிபகுதியில் பகுதியில் எல்லாமே புதுசு மங்கையர் மலரில் இணையப்பக்கம் மின்னுகிறது.

Rajathi sankar says :

இனிக்குமா புளிக்குமா

Ghandhi says :

மிகவும் சிறப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :