• TRENDING | பர பர

கேன்ஸ் திரைப்பட விருதுகள்: சிவப்பு கம்பள வரவேற்பில் எமி ஜாக்சன்!





கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும். திரைப்பட விழா வெகு பிரபலம். அந்த வகையில் 74வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 6-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

ஆஸ்கார் விருதுக்கு இணையாகப் போற்றப்படும் இந்த கேன்ஸ் திரைபட விழா விருதுக்காக, பல்வேறு நாட்டு, மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன..

இந்த திரைப்பட விழாவில் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். முத்தமிடுவது, அணைப்பது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரான்சில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இவ்விழா நடைபெற்றது. பல்வேறு நாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்ற இந்த விழாவின் இறுதியில் நேற்று இறுதியாக சிறந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படமான `Titane`க்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய அம்சமாக, அரங்கு நுழைவாயிலில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில், பிரபல திரைப்பட நட்சத்திரங்களும் மாடல்களும், வித விதமான உடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து விழாவை அலங்கரித்தனர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :