• SPARKLES | மினுமினு

பப்பாளி சாஸ் செய்வது எப்படி?


அபர்ணா சுப்ரமணியம், சென்னை





பப்பாளி நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு ஆரோக்கியமும், இருதய நோய்களுக்கு நல்ல பலனும் கொடுக்கும் பழம் இது! ஆனால், சிலருக்கு அந்த பழத்தின் வாசனை பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் பப்பாளீயை சாஸ் பண்ணி சாப்பிடலாம். இந்த சாஸ் ரொட்டி, தோசை, உப்புமா போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். சரி.. பப்பாளி சாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்..

தேவையானவை:

பப்பாளி (அதிகம் பழுக்காமல் சற்று கனிந்தது) - 2 கிலோ,

சர்க்கரை - கால் கிலோ,

உப்பு - 50 கிராம்,

வெங்காயம் - 50 கிராம்,

பூண்டு- 25 கிராம்,

திராட்சை - 25 கிராம்,

முந்திரி பருப்பு- 25 கிராம்,

உலர்ந்த பழங்கள் - 50 கிராம்,

சுக்குப் பொடி - 25 கிராம்,

மிளகாய்ப் பொடி - 15 கிராம்,

பட்டை - 10 கிராம்,

ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 10 கிராம்,

வினிகர் - 1 ஸ்பூன்.

செய்முறை:

பப்பாளியை நன்கு கழுவி தோல் சீவி விதைகளை நீக்கி கேரட் துருவிக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். மசாலா சாமான்களை லேசாக வறுத்து நன்கு நைஸாக பொடி செய்து கொள்ளவும்.

துருவிய பப்பாளி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும்வரை தண்ணீர விட்டு குக்கரில் வைக்கவம். 2 விசில் வந்ததும் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கவும். வெந்த கலவையில் சர்க்கரையை கலந்து நன்கு கைவிடாமல் கிளறவும். சற்றே இறுகியபின் மசாலாப் பொடி, சுக்குப்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்துக் கிளறவும். கலவை நன்றாக இறுகியதும், நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரியை சேர்க்கவும். கடைசியில் உப்பு போட்டால் சாஸ் நீர்த்து போகாமல் இருக்கும்.

அடுப்பிலிருந்து இறக்கியபின் ப்ரிசர்வேடிவிற்காக சிறிது வினிகர் சேர்த்து கலந்து விடவும். சாஸ் ரெடி! இந்த சாஸ் நன்கு ஆறிய பின், பாட்டில்களில் விட்டு அழுத்தி மூடி வைக்கவும்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

மிக எளிமையாக கற்றுக் கொடுத்து விட்டீர்கள் நன்றி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :