• தினம் ஒரு ஜூஸ்

இஞ்சி சுரசம் ஜூஸ்


வி. ஸ்ரீவித்யா, நங்கநல்லூர்.

தேவையான பொருட்கள்:

தேன் - 100 கிராம்

இஞ்சி- 100 கிராம்

தனியா - 50 கிராம்

சீரகம்- 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எலுமிச்சை ஜூஸ் - 50 மிலி

செய்முறை:

தனியா மற்றும் சீரகம், இஞ்சி மூன்றையும் நன்றாக மசிய அரைத்து கொள்ளவும். இந்த கலவையை வாணலியில் சேர்த்து உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். மருந்து வாசனை போனதும், கீழே இறக்கி வைத்து நன்றாக ஆறவிட்டு, தேன் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கலந்து காற்று புகாத பாட்டிலில் பத்திரப் படுத்தவும்.

தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் ஜூஸ் மற்றும் நீர் கலந்து பருகவும்.

பித்தம், அஜீரணம், தலைவலி, ஆகியவற்றை குணப்படுத்தும் இந்த ஜூஸ்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

பயனுள்ள தொகுப்பு... இன்றைய சூழ்நிலைக்கு தேவையானது

பொ.பாலாஜிகணேஷ் says :

பயனுள்ள மருத்துவ தகவல் இஞ்சி சுரசம் ஜூஸ்

எம். வசந்தா says :

ஆரோக்கியத்துகேற்ற ஜூஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :