• TRENDING | பர பர

வனிதா விஜயகுமார் ஸ்லிம் ஆக இதுதான் காரணமாம்!





பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தபோது நடிகை வனிதா விஜயகுமார் புசுபுசுவென்றிருந்தார். இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை குறைந்து சிக்கென்றாகி விட்டார். இது எப்படி சாத்தியம் என்று நெட்டிசன்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வனிதா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததைவிட தற்போது மேலும் மெலிந்திருக்கும் இவர், தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அதன் சீக்ரெட்டை பகிர்ந்துகொண்டார். அவை..

`பொதுவாகவே உடல் எடையை குறைக்க, ஏராளமான டயட், உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், நான் அப்படியெல்லாம் எதுவும் பண்ணவே இல்லை. என்னுடைய டயட் மிகவும் எளிமையான ஒன்று.

நான் என் தினசரி உணவில் சிறிதளவு மாற்றம் மட்டுமே செய்தேன். எப்போதும் சாப்பிடும் கறிக்குழம்பு, , மீன் குழம்பு, சாம்பார் ஆகியவற்றோடு அரிசிக்கு பதிலாக, கேழ்வரகு, சாமை, தினை,குதிரைவாலி போன்ற மில்லட் வகைகளை மாற்றி சாப்பிட்டேன். குறிப்பாக சாமை தயிர் சாதம் என்றால் எனக்கு உயிர். வஞ்சனையே இல்லாமல் ஒரு பிடிபிடிப்பேன். அரிசி உணவுகளைத் தவிர்த்து, இப்படி சிறுதானிய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டதால், என் உடல் எடையை குறைந்தது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் வழிவகுத்தது! இதுதான் என் ஸ்லிம் சீக்ரெட்!

இப்படி தன் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :