• தீபம் - ஆன்மீகம்

அம்மையப்பன் காணும் ஆனி திருமஞ்சனம்!


- பொ.பாலாஜிகணேஷ்

ஆதியந்தமில்லா அம்மையப்பக் கடவுளாம் சிவபெருமானுக்கு இன்று (15.7.2021) ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. திருமஞ்சனம் என்ற சொல்லுக்கு புனித நீராட்டல் என்று பொருள். இது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும். சிவனின் 64 மூர்த்தி வடிவங்களில் ஒன்றான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறு கின்றன. அதில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந் தவை. இவ்விரண்டு விழாக்களும் தில்லை சிதம்பரத்தில் பிரம்மோத்ஸவ மாக மொத்தம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆனி கார்த்திகை அன்று திருமஞ்சன விழா ஆரம்பமாகிறது. முதல் எட்டு நாட்கள் விநாயகர், சுப்ரமணியர், சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகியோர் வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் விநாயகர், சுப்ரமணியர், நடராஜர், சிவகாமியம்மை, சண்டேசுவரர் ஆகியோர் தனித் தனித் தேர்களில் வலம் வருகின்றனர். பின் நடராஜர் சிவகாமி அம்மை யுடன் யானைகள் தாங்கியது போல் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இரவில் தங்குவார். பத்தாம் நாளான ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் நடராஜருக்கும் சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆனி உத்திரத்தன்று பகல் ஒரு மணி அளவில் நடராஜரும் சிவகாமி அம்மையும் நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருளுகின்றனர். நடராஜரும், சிவகாமி அம்மையும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடையில் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண மக்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பர். நடராஜ பெருமானுக்கு சாயுங்காலத்தில் (பிரதோஷ வேளையில்) சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்காரமும் நடைபெறும். இதனையே ஆனித் திருமஞ்சனம் என்கிறோம். இந்நிகழ்ச்சி யின்போது நடராஜருக்கு பதினாறு வகை தீபாரதனை நடைபெறுகிறது. பின் இரவு மீண்டும் சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மூலவர் நடராஜரே வெளியே வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி .

ப.ஆனந்தன் says :

பொ.பாலாஜிகணேஷ் அவர்ளின் ஆனி திருமஞ்சன கட்டுரை படித்தேன்.....மிக அருமை ஆனித் திருமஞ்சன நன்னாளில் இந்த கட்டுரையை படித்ததில் மகிழ்ச்சி.

உதயகுமார் says :

ஆனித்திருமஞ்சனம் அன்று கல்கி இணையதளத்தில் அம்மையப்பன் காணும் ஆனித்திருமஞ்சனம் கட்டுரை படித்தேன் மகிழ்ச்சி அறிந்திராத பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

Vijayalakshmi says :

கல்கி இணையதளத்தின் மூலமாக தரிசனம் அன்று இக்கட்டுரையை படித்தற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

BalaSubramanyam chidambaranathanPatti says :

ஆனித் திருமஞ்சன கட்டுரையைப் படித்தேன், அறிந்திராத பல விஷயங்களை தெரிந்துகொண்டேன், இந்த நன்னாளிலே படித்ததில் மகிழ்ச்சி நன்றி.

K. Anbarasu. says :

ஆனித் திருமஞ்சனம் இன்று அம்மையப்பன் சிறப்புகளை பற்றி அறிந்து கொண்டேன். கல்கி இணையதளத்திற்கு நன்றி.

S. ஜெயலட்சுமி. மாரியப்பாநகர் says :

ஆனி திருமஞ்சன கட்டுரை, மிக சிறப்பாக இருந்தது கல்கி இணைய தளத்திற்கும், கட்டுரையாளர் பாலாஜிகணேஷ் அவர்களுக்கும் நன்றி

Sankar . P says :

கல்கி இணையதளத்தில் பாலாஜிகணேஷ் அவர்களின்அம்மையப்பன் காணும் ஆனித்திருமஞ்சனம் கட்டுரை படித்தேன் மகிழ்ச்சி அறிந்திராத பல விஷயங்களை அறிந்து கொண்டேன்

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

ஆனி திருமஞ்சனம் பற்றி படித்து மெய்சிலிர்த்து போனேன்.நேரில் சென்று தரிசித்த உணர்வைத் தந்தது. கல்கி இணையத்துக்கு நன்றி.

Rajathi Sankar says :

கல்கி இணையதளத்தில் பாலாஜிகணேஷ் அவர்களின் கட்டுரை படித்தேன் மிக பயனுள்ளதாகவும் பிரம்மிப்பாகவும் இருந்தது இது போல் பயனுள்ள செய்தி வெளியிட்டமைக்கு நன்றி

ராமகிருஷ்ணன். says :

மிக சிறப்பான தகவல்.... அறிந்திடாத பல விஷயங்களை அறிய வைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :