• TRENDING | பர பர

அந்தரத்தில் தலைகீழாக யோகா: நடிகர் அல்லு அர்ஜுன் மனைவி!





தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அல்லு அர்ஜுன். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். தமிழகத்திலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இறுதியாக நடித்த அல வைகுண்டபுரமுலு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் மனைவியான ஸ்நேகா ரெட்டினாந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஸ்நேகா அவ்வப்போது தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தற்போது தான் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘’உலகை தழைகீழாக பார்ப்பது’’ என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அனைவரின் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :