• TRENDING | பர பர

80-களின் நடிகைகள் சந்தித்து அரட்டை: வைரலாகும் புகைப்படம் !





தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பிரபலங்கள் சமீபத்தில் ஒன்றாக சந்தித்து அரட்டையடிக்கும் புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90-களில் .ராதிகா, ராதா, அமலா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, சீதா, வடிவுக்கரசி,மாதவி, ரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் திரையில் மின்னினர். இவர்கள் அனைவரும் அவ்வப்போது சந்தித்து அரட்டையடித்து தங்கள் நட்பைத் தொடர்கின்றனர். அதுபோன்ற ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் ராதிகா சரத்குமார், ராதா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, குஷ்பு, லிசி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து அரட்டை அடித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ‘’வார இறுதி நாளில் அனைவரும் ஒன்றாக இணைந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து, வைரலாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :