• TRENDING | பர பர

ஒரு பர்கர் விலை ரூ.4,50,000 ! அப்படி அதில் என்ன அதிசயம் தெரியுமா?





நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் என்பவர் தயாரித்த ஒரு பர்கர், உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. அதன் விலை அதிகமில்லை.. ஜென்டில்மென்! அந்த ஒரு பர்கரின் விலை இந்திய மதிப்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே! உலகின் மிக விலையுயர்ந்த பர்கராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பன்களுக்கு நடுவே சில உணவுவகைகளை அடைத்து உண்ணும் பர்கர் ருசிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ தயாரித்துள்ள பர்கர், உலகின் விலை உயர்ந்த பர்கராக சாதனை படைத்துள்ளது. அங்கு டெ டால்டன்ஸ் உணவகத்தில் இவர் தயாரிக்கும் இந்த பர்கரின் பெயர் ‘’தி கோல்டன் பாய்’’ என்பதாகும்.

5 ஆயிரம் ஈரோ (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்) மதிப்புள்ள இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன், உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுகிறதாம்.

இதனால் இந்த பர்கரின் விலை இவ்வளவு காஸ்ட்லி! ஆனால் விலையைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் அந்நாட்டு மக்கள் இந்த பர்கருக்கு ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :