• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

முளைகட்டிய தானிய சாதம்


சுதா திருநாராயணன். ஸ்ரீரங்கம்.

தேவையானவை:

முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, காராமணி - தலா ஒரு கப்.

உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்.

பெரிய வெங்காயம்-2

பச்சை மிளகாய்-4 பொடியாக நறுக்கியது.

பச்சை கொத்தமல்லி - சிறிதளவு.

கரம்மசாலா - ஒரு ஸ்பூன்.

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைகட்டிய தானியங்கள் மூன்றையும் தேவையான அளவு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நெய்யும் எண்ணையும் ஊற்றி கடுகு சீரகம் பச்சைமிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் அத்துடன் உதிர்த்த சாதம், வேக வைத்த முளைகட்டிய தானியங்களை கலக்கவும். உப்பு, கரம்மசாலா கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :