• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

மாம்பழ கூட்டான் சாதம்.


கிரிஜா ராகவன், கோவை.

தேவையானவை;-

மாம்பழம்- 1

வேக வைத்த வெள்ளை பூசணிக்காய்- 1 கப்.

அரைக்க:

பச்சைமிளகாய் - 4

தேங்காய் – துருவியது 1கப்,

பூண்டு-1 பல்

இஞ்சி,- சிறு துண்டு.

உப்பு-தேவையான அளவு;

தாளிக்க;-கடுகு, சீரகம்;

அலங்கரிக்க- கொத்தமல்லி (பொடியாக

நறுக்கியது)

வெங்காயம் - 2

குடைமிளகாய் -2.

வெங்காயம், குடைமிளகாயை நன்குவதக்கி வைத்துக்

கொள்ளவும். சாதம் வடித்து வைத்துக்கொள்ளவும்

செய்முறை;-

வேகவைத்துள்ள மாம்பழம் மற்றும் பூசணிக்காயுடன்

அரைத்தவற்றை சேர்த்து கலக்கி அடுப்பில் ஏற்றவும்.நன்கு கொதி

வந்தபின் கெட்டித்தயிர்(கட்டிஇல்லாமல்)சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு சாதம் உப்பு. சேர்த்து நன்கு கலக்கவும். அதன்மேல். வதக்கிய வெங்காயம், குடைமிளகாய், கொத்தமல்லிதழை தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும். இதற்கு. சைட்டிஷ்ஷாக தக்காளி ரெய்தா நன்றாக இருக்கும்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :