• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

சிந்தாகு அன்னம் (புளியங்கீரை சாதம்)


வி.ஸ்ரீவித்யா பிரசாத்.

தேவையான பொருட்கள்:

புளியங்கொழுந்து - 150 கிராம்

பச்சை மிளகாய்- 4

வரமிளகாய்- 3

தனியா-25 கிராம்

வெந்தயம்- ஒரு சிட்டிகை

பெருங்காயம்- தேவையான அளவு

சாம்பார் வெங்காயம்-ஒரு கைப்பிடி அளவு

நாட்டுப் பூண்டு- 10

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை:

வரமிளகாய், தனியா, வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துசெய்து கொள்ளவும்.

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பச்சை மிளகாய், புளியங்கீரை ஆகியவற்றை சுருள வதக்கி கொள்ளவும்

மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்றாக பொறித்துக் கொள்ளவும்.

வதக்கிய புளியங்கீரை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பேஸ்டாக அரைத்து கொள்ளவும்,

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து உதிரியாக வடித்த சாதம், புளியங்கீரை பேஸ்ட், பொடி , வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்றாக இளம் சூட்டில் கலந்து பரிமாறவும். ருசி அபாரமாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :