• TRENDING | பர பர

ஸ்டேப்ளர் பின்னில் தனுஷ் ஓவியம்: கோவை இளைஞர் சாதனை!





சினிமா இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸானது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வெளியிட்டார்.

இந்த கர்ணன் படத்தில் நடிகர் தனுஷின் கெட்டப்பை அச்சுஅசலாக ஸ்டேப்ளர் பின்களை உபயோகித்து ஓவியமாக உருவாக்கியுள்ளார் கோவையை சேர்ந்த சீவாக வலுதி என்ற இளைஞர். கர்ணன் படத்தை தியேட்டரில் பார்த்து, அதனால் அந்த இளைஞர், கர்ணன் படக்குழுவுக்கும் தன் மனம் கவர்ந்த ஹீரோ-வான தனுஷூக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஓவியத்தை உருவாக்க சீவாகாவுக்கு ஒரு மாதம் அவகாசம் தேவைப்பட்டதாம். இதற்காக சுமார் 10 லட்சம் ஸ்டேப்ளர் பின்கள் உபயோகப் படுத்தி உருவாக்கியிருக்கிறார். இதுகுறித்து சீவாகா கூறீயதாவது:

கர்ணன் படம் பார்த்ததுமே பிடித்துப் போனது. பொதுவாக

ஸ்டேபிளர் பின்களை வைத்து ஓவியம் உருவாக்க யாரும் முயற்சித்தது இல்லை. அதனால் ஸ்டேபிளர் பின்னை வைத்து கர்ணன் தனுஷ் மற்றும் காட்டு பேச்சியின் உருவத்தை உருவாக்க நினைத்தேன்.

அசுரன் படத்திற்காக தனுஷ் தேசிய விருது வென்றபோதே இந்த ஆர்ட்டை உருவாக்க நினைத்தேன். ஆனால் அப்போது முடியாமல் போய்விட்டது. அதனால் கர்ணன் படக்குழுவை கவுரவிப்பதற்காக தற்போது செய்துள்ளேன்.

-இவ்வாறு சீவாகா தெரிவித்துள்ளார். இவரது இந்த சாதனை ஆசிய சர்வதேச சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனையை கலைப்புலி தாணுவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :