• TRENDING | பர பர

பாராசூட்டில் சென்ற இளைஞர்: கயிறு அறுந்து விபத்தில் சிக்கி பரிதாபம்!





எகிப்தில் பாராசூட்டில் சென்ற இளைஞர் கயிறு அறுந்ததால், அபாயகரமாக கீழே விழத் தொடங்கினார். இதையடுத்து உடனடியாக அவரைக் காப்பாற்ற மீட்புப் படகு விரைந்தது. ஆனால் அந்த இளைஞர் பாரச்சூட்டுடன் அந்த படகின் மீது அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஷார்ம் எல் ஷேக் என்ற கடல் பகுதியில் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பறக்க முயன்ற பாராசூட்டின் கயிறு அறுந்ததால் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைக் கண்ட மீட்புப் படையினர் விரைவுப் படகில் சென்று அவரை மீட்க முயன்றனர். அப்போது காற்று வேறுதிசையில் வீசியதால் படகை நோக்கி வந்த அந்த சுற்றுலாப் பயணி நேராக படகின் மீது அதிவேகத்தில் மோதினார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :