• தீபம் - ஆன்மீகம்

கோயிலுக்குச் செல்கையில் தங்க நகை ஏன் அணிய வேண்டும்?


- பொ.பாலாஜி கணேஷ்





கோயில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடி மரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள் பிராகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள்தான் கோயில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

இங்குதான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள் அதிகமாகப் பரவியிருக்கும். முற்காலங்களில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரம்மாண்டமான கோயில்கள்தான் பயன்பட்டன. மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளைப் பதித்து, அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாக்கப்படும்.

அதன் பின்தான் கோயில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக கோயில் சிலை மூலம் வெளிக்கொணரும். எல்லா கோயில்களிலும், மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும்படி, கதவுகள் அமைந்திருக்கும். நேர்மறை அலைகள் ஒருமித்துக் கிடைக்க, இது வழிவகுக்கும்.

இதேபோல், மூலஸ்தானத்தில், அணையா விளக்கு ஒன்று எப்போதும் இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடியும் இருக்கும். நேர்மறை எனர்ஜியை பரவச் செய்யும் ஒரு நுட்பமான செயல்தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கம் வேண்டுதலின்படி மாங்கல்யம், சாவி, பேனா, புது நகைகள் போன்றவற்றை இங்கு வைத்து எடுப்பதால், இந்த உலோகங்கள் அங்குள்ள எனர்ஜியை, அப்படியே கிரகித்துக்கொள்ளும்.

அதனால்தான், கோயிலுக்குச் செல்லும்போது தங்கத்தினால் ஆன நகைகளை அதிகம் அணிந்து போவது நல்லது எனக் கூறப்படுகிறது. சுற்று பிராகாரப் பாதை முழுவதும் கருங்கல் பதித்துதான், பண்டைய கோயில்கள் அமைந்திருக்கும். வெறும் கால்களுடன் கருங்கல் மீது பதிய நடக்கும்போது, நம் கீழ் பாதத்திலுள்ள வர்ம புள்ளிகளுக்கு அழுத்தம் கிடைக்கும். நம் அனைத்து உடல் உறுப்புகளுக்கும், நிவாரணம் தரக்கூடிய எல்லா புள்ளிகளுமே பாதத்தில்தான் இருக்கின்றன. என்னே நமது முன்னோர்களின் அற்புத சிந்தனை!

Comments

பொ. பாலாஜிகணேஷ் says :

என் தொகுப்பை வெளியிட்ட ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :