• TRENDING | பர பர

முதல்வர் ஸ்டாலின் ஓட்டிய சைக்கிள்: அதில் என்னென்ன வசதிகள்?





முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ம் தேதி, கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றது சமூகசவலைதளங்களில் செம டிரெண்ட் ஆனது. வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ரூ.81 ஆயிரத்து 500 என்றும் அம்பத்தூரிலுள்ள `டெய்ஜோ` நிறுவனம் தயாரிக்கும் `பெடல்ஸ்-சி2` என்ற வகை சைக்கிள் இது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

அதிகபட்சம் 120 கிலோ எடை வரை உள்ள நபர்கள் மட்டுமே இந்த சைக்கிளை பயன்படுத்த முடியும். 48 செ.மீ. நீளம் உள்ள இந்த சைக்கிளின் `பிரேம்` அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. 7.0 ஏ.எச். லித்தியம் அயன் பேட்டரி உடைய 250 வாட்ஸ் திறன் கொண்ட மோட்டார் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.

ஏழு கியர்களைக் கொண்ட இந்த சைக்கிளில் மோட்டார் பெடல் கொடுக்கப்பட்டுள்ளது. சைக்கிளின் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ஷாக்கப்சர், ஹைட்ராலிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

`பெடல்ஸ்` செயலி மூலமாகவும் இந்த சைக்கிளை இயக்க முடியும். எல்.சி.டி. திரை பொருத்தப்பட்டுள்ள இந்த சைக்கிளின் முன்புறமும் பின்புறமும் 25 எல்.யு.எக்ஸ். அளவுடைய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு!

Comments

கே.ஆர். உதயகுமார் says :

சாமானியன் வாங்குவதற்கு கடினமான விலை தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :