• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

கீரை சாதம்


என்.கோமதி, நெல்லை.

தேவையானவை :-

பொடியாக நறுக்கிய அரைக்கீரை -2 கப்

பச்சரிசி 1கப்

துவரம்பருப்பு 1/4கப்

புளி - நெல்லிக்காயளவு

தேங்காய்ப்பூ -2 டேபிள்ஸ்பூன்.

வெங்காய வடகம்- 2

நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - திட்டமாக

கறிவேப்பிலை – 10 இலைகள்.

அரைக்க :-

மிளகாய் வத்தல் 2

சீரகம் 1டீஸ்பூன்

வெங்காயம் 5

பூண்டு 5 பல்

செய்முறை :-

பிரஷர் பேனில், அரிசி, துவரம்பருப்பை போட்டு 3கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இருநிமிடங்கள் கழித்து ,புளியை கரைத்து விட்டு, அரைக்க வேண்டியதை, நைசாக அரைத்துப் போடவும். உப்பு, கீரை,தேங்காய்ப்பூ சேர்க்கவும்.வெங்காய வடகத்தை ஒன்றிரண்டாக தட்டி, எண்ணெயில் பொரித்து, கறிவேப்பிலை தாளித்து, கலந்து மூடி விடவும்.மூன்று விசில் வந்தவுடன் தீயை அணைத்து விடவும்.பசுமையான, ருசியான கீரை சாதம் ரெடி. அப்பளம், கூழ்வடகம் ஏற்ற சைட்டிஷ்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :