• TRENDING | பர பர

நெத்திலி மீன் குவியல்: ஏலத்தில் அபார விற்பனை!





குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன.

தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை அமலில் இருந்து வருகிறது. இந்த தடை வரும் 31 ம் தேதி நள்ளிரவுடன் முடிகிறது. இதனால் பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மட்டுமே தொழில் செய்து வருகின்றன. நேற்று குளச்சல் மீனவர்களின் கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். வியாபாரிகள் இந்த மீன்களை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இதேபோல் கோடிமுனை, வாணியக்குடி கிராமங்களிலும் நெத்திலி மீன்கள் அதிகம் கிடைத்ததால், கருவாடு வியாபாரிகள் மற்றும் வெளிமாவட்ட மீன் எண்ணெய் ஆலையினர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :