• SPARKLES | மினுமினு

விண்வெளிப் பெண்ணே: ஆந்திராவைச் சேர்ந்த சிரிஷா சாதனை!


- சுந்தரராமன். டெக்ஸாஸ்





அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளிப் பெண்களான கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து சிரிஷா பந்தலா தற்போது தேர்வாகியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் 1987-ல் முரளிதர - அனுராதா தம்பதியினருக்கு மகளாக பிறந்த சிரிஷா, வளர்ந்தது அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில்! அங்கு ஏரோனாட்டிக்கல் பொறியியல் பட்டம் பெற்ற சிரிஷாவுக்கு சிறு வயது முதலே விண்வெளி பயணத்தின் மீது ஆர்வம் அதிகமாம். 2015-ல் விர்ஜின் காலக்ட்டிக் நிறுவனத்தின் பொது மேலாளர் பணியில் சேர்ந்த சிரிஷா பந்தலா, தற்போது அதே நிறுவனம் செலுத்தும் விண்கலத்தில் வரும் 11-ம் தேதி விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மெக்சிகோவில் தொடங்கும் இந்த பயணத்தில் சிரிஷா பந்தலாவுடன் மேலும் 5 பேர் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு செல்லும் 2வது பெண் என்ற பெருமை சிரிஷாவிற்கு கிடைத்துள்ளது.

விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் வரிசையில் ராகேஷ் ஷர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து 4-வது இந்தியராக சிரிஷா பந்தலா தேர்வாகியுள்ளார்.விண்வெளி பயணம் மேற்கொள்ளும் சிரிஷாவிற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :