• TRENDING | பர பர

உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபியாக உருவான குரங்கு!





உலகில் முதன்முதலாக சீனாவைல் செயற்கை கருவூட்டல் முறையில் ஃபிராங்கோயிஸ் வகையைச் சேர்ந்த குரங்குகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது.

பிராங்கோயிஸ் லங்கூர்ஸ் எனப்படும் இந்த வகை குரங்குகள் சீனா மற்றும் வியட்நாமின் வடக்கு மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது வில், தற்போது இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோய், அரிதாகிவரும் வனவிலங்குகளின் பட்டியலில் உள்ளது. இந்நிலையில், உலகில் முதன்முறையாக செயற்கை கருவூட்டல் முறையில் இந்தவகை குரங்கு ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த டெஸ்ட் டியூப் பேபியான குரங்கு தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக, அந்த சீன ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

.

உலகளவில் இந்தவகை குரங்குகளின் எண்ணிக்கை தற்சமயம் மொத்தம் 2 ஆயிரம் உள்ள நிலையில், அதில் 1,500 குரங்குகள் சீனாவில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :