• TRENDING | பர பர

ரூ 4.5 கோடி பரிசு: துபாயில் லாட்டரியில் இந்தியருக்கு அதிர்ஷ்டம்!





கேரளாவை சார்ந்த ரஞ்சித் சோமராஜன் என்பவர் அபுதாபியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்.

இந்நிலையில், அவருக்கும் அவரது நண்பர்கள் 9 பேருக்கும் கடந்த வாரம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹாம் பரிசு கிடைத்துள்ளது .அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 40.5 கோடி ஆகும். இதுகுறித்து அவர் கூறியதாவது, லாட்டரியில் முதல் பரிசு வெல்வேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு கிடைக்கும் என நம்பி இருந்தேன்.

நான் 2008ஆம் ஆண்டு முதல் இங்கு இருக்கிறேன். துபாய் டாக்ஸியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறேன். வேறு நிறுவனங்களிலும் வேலை செய்து இருக்கிறேன். கஷ்டமான காலம் என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கும் என சில நிறுவனங்களுக்கு மாறினேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் லாட்டரியில் 40 கோடி ரூபாய் கிடைத்தது பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

ஜூன் 29-ஆம் தேதி நடந்த குலுக்கலில் பரிசு கிடைத்துள்ளது. என்னுடைய பெயரில் தான் இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கினேன். எனக்கு ஒரு நாள் அதிர்ஷ்டம் வரும் நம்பினேன். அந்த நாள் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :