• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

மூலிகை சாதம்.


கே.லதா.

தேவையானவை:

சீரக சம்பா அரிசி – 1 கப்

வெற்றிலை – 2

கற்பூரவல்லி – 3 இலைகள்.ர்பூரவளி

துளசி இலை – 2

புதினா – சிறிதளவு.

அரைத்த தேங்காய் - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பட்டை – 2 துண்டு.

பிரிஞ்ஜி இலை - 1

ஏலக்காய் – 2.

மிளகு தூள் – 2 டீஸ்பூன்.

பச்சை மிளகாய் – 3.

வெங்காயம் – 2.

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்.

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்.

கொத்தமல்லி இலை – சிறிதளவு.

முந்திரி பருப்பு - 10

எண்ணெய், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – 2 கப்.

செய்முறை:

1) சீர்கா சம்பா அரிசியை 15 நிமிடங்கள் கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்

2) வெற்றிலை, கற்பூரவல்லி, புதினா, துளசி ஆகியவற்றை மஞ்சள் கலந்த உப்பு நீரில் கழுவவும். இந்த இலைகளுடன் தேங்காய் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்

3)ஒரு கடாய் எடுத்து அனைத்து மசாலா பொருட்களையும் இரண்டு டீஸ்பூன் நெய் கொண்டு வறுக்கவும்

4)இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

5)அரைத்த பேஸ்ட் சேர்த்து வறுக்கவும்

6)மிளகு தூள் / மஞ்சள் / தேவையான உப்பு சேர்க்கவும்.

7)பிரஷர் குக்கரில் அனைத்து வறுத்த பொருட்களையும் சேர்ககவும்.

8) அத்துடன் 2 கப் தண்ணீர் மற்றும் 1 கப் சீராகா சம்பா அரிசியைச் சேர்க்கவும். இதை 2 ஸ்பூன் நெய்யுடன் நன்றாக கலக்கவும்.

9)பிரஷர் குக்கரில் உள்ள அனைத்து பொருட்களையும் 2 விசில் வரும்வரை சமைக்கவும்.

10 ஸ்டீம் இறங்கியதும் குக்கரைத் திறந்து 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

10)வறுத்த முந்திரி மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

இந்த மூலிகை சாதம் நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்கும். நுறையீரல்லுக்கு மிகவும் நல்லது .

Comments

Sujatha Ramaswamy says :

Very nice.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :