• TRENDING | பர பர

அமெரிக்கா சுதந்திர தினம்: வாண வேடிக்கையுடன் கொண்டாட்டம்!





அமெரிக்காவின் 245-வது சுதந்திர தினத்தை வான வேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு சுதந்திர தினத்தை, வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற வாண வேடிக்கையை, அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கொண்டாட்ட நிகழ்வு இது என்பது குறிப்பிடத் தக்கது. அதேபோல் நியூயார்க் உள்ளிட்ட பிற நகரங்களீலும் அந்நாட்டு சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

16 மாதங்களுக்குப் பின், கொரோனாவில் இருந்து நாடு மீண்டதை கொண்டாடும் வகையிலும் இச்சுதந்திர தினத்தை டபுள் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவிற்குப் பின் அமெரிக்க மக்கள் மீண்டு வருவதாகவும், ஆனால் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை எனவும் சுதந்திர தினச் செய்தியாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :