• SPARKLES | மினுமினு

அமெரிக்க தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு!


- சுபஸ்தினி





அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4-ம் தேதி கொண்டாடப் படுகிறது. அந்தவகையில் அந்நாட்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் மார்க் ஜூக்கர்பெர்க் நீர் சறுக்கு (Surfing) செய்த வீடியோ வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் நேற்று (ஜூலை 4) அமெரிக்காவில் 245-வது சுதந்திர தின விழா வாண வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிபரான மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு (Surfing) செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

சர்ஃபிங் போர்டில் அமெரிக்கா தேசியக்கொடியை கையில் ஏந்தி, அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்லும் வீடியோவினை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Instagram : https://www.instagram.com/tv/CQ6u_nFnGmR/?utm_source=ig_embed&ig_rid=c7af016e-ac84-476f-bf05-645cc5149dbf

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :