• TRENDING | பர பர

வலிமை அப்டேட் எப்போ வரும்? சாமியாரை கலாய்க்கும் ரசிகர்கள்!





நடிகர் அஜித் குமாரின் படங்களை பொறுத்தவரையிலும் அப்டேட் என்பது ரசிகர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ’’வலிமை’’ படத்தின் அப்டேட்டுக்காக 2 வருடங்களாக காத்திருக்கிறார்கள். இதற்காக பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கிரிக்கெட் வீரர்கள் என்று பலரிடமும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றார்கள் அஜித் ரசிகர்கள்.

இதனால் எரிச்சலான கிரிக்கெட் வீரர்கள் பதிலுக்கு கிண்டலடித்துள்ளனர். இந்நிலையில் ஒரு கோயிலில் சாமியாடிய சாமியார் ஒருவரிடம் சிலர் ``ஐயா வலிமை அப்டேட் இருக்குதா?`` என்று கேட்டு அலப்பறை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த சாமியார் பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனே விபூதியை பூசிவிட்டு சென்றிருக்கிறார்.

இந்த வீடியோ இணையங்களில் வைராகி வருகிறது.

Twitter : https://twitter.com/i/status/1411615262265155584

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :