• TRENDING | பர பர

1 கோடி சப்ஸ்க்ரைபர்: சாதனை படைத்த தமிழ் யூடியூப் சேனல்!





தமிழ் யூடியூப் சேனல்களில் முதன்முதலாக 1 கோடி சப்ஸ்க்ரைபர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது வில்லேஜ் குக்கிங் என்ற சேனல்!

சமீபத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இந்த சேனல் சார்பாக வெங்காய தயிர் பச்சடி செய்தது வைரலாகியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் ’வில்லேஜ் குக்கிங்’ என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டனர். முதல் வீடியோவுக்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து அதில் பல வீடியோக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கிடைத்துள்ளது என்பதும் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த 6 பேர் கொண்ட டீம், சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கினர். ஒரு கிராமத்தின் விவசாயிகளான இந்த 6 பேர் யூடியூப் சேனல் ஆரம்பித்து இன்று இந்தளவு உயர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :