• தினம் ஒரு வெரைட்டி ரைஸ்

கார்ன் மசாலா ரைஸ்


ஜெயலட்சுமி, கொரட்டூர்.

தேவையானவை :-

பாஸ்மதி அரிசி -1 கப்,

உதிர்த்த சோளம் -2கப்,

பச்சைப் பட்டாணி -1கப்,

முந்திரி -4,

மிளகாய் தூள் -1டீ ஸ்பூன்,

கரம் மசாலா தூள் -1டீ ஸ்பூன்,

எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்,

மஞ்சள் தூள்-கால் ஸ்பூன்,

நெய் -2 டேபிள் ஸ்பூன்,

கடுகு, சீரகம்,- 1 டீஸ்பூன்.

மல்லித்தழை, - 1 கைப்பிடி.

உப்பு – தேவைக்கேற்ப.

சர்க்கரை – அரை டீஸ்பூன்

செய்முறை :-

கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை வறுக்கவும். பிறகு கடுகு, சீரகம் சேர்க்கவும். பின் சோளம், பட்டாணி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், அரிசி, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும். வெந்த சாதக் கலவையைத் தட்டில் கொட்டி, எலுமிச்சைச் சாறு, வறுத்த முந்திரி, மல்லித்தழை, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, பிறகு பரிமாறவும். இதற்கு ஆனியன் தயிர்ப் பச்சடி நல்ல காம்பினேஷன். வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ரைஸ் மிகவும் சத்து நிறைந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :