• TRENDING | பர பர

கீழடி அகழ்வாராய்ச்சி: சுடுமண் கிண்ணங்கள் கண்டுபிடிப்பு!





கீழடி அகழ்வாராய்ச்சியில் பழங்கால சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப் பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் பண்டைய கால மனிதர்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்கள் அதிகளவில் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புனல் போன்ற கிண்ணங்கள், தட்டையான அடிபாகங்கள் கொண்டவையாகக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தாவது:

கீழடி பகுதியில் சுமார் `2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டதற்கு சாட்சியாக நெசவு தக்களி, நெசவு குண்டு போன்றவைகள் கிடைத்துள்ளன. எனவே வண்ணச் சாயம் காய்ச்சும் பயன்பாட்டிற்காக இதுபோன்ற கிண்ணங்களை பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. கீழடியில் மட்டும் 7-ம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் கிடைத்துள்ளன. கீழடியில் இதுவரை 7 அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டில் பண்டைய கட்டிட இடிபாடுகள் கண்டறியப் பட்டுள்ளன.

கூரை ஒடுகள், செங்கற்கள் உள்ளிட்ட சேதமடைந்த பகுதிகள் கிடைத்ததால் இங்கு கட்டிடங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகே மேற்கொண்டு விபரங்கள் தெரிய வரும்.

- இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :