• TRENDING | பர பர

கல்யாண செலவுக்கு பணம் இல்லை.. விக்னேஷ் சிவன்!





கல்யாண செலவுக்கு பணம் இல்லாததால்தான் நயன்தாராவுடன் இன்னும் கல்யாணம் முடிக்காமல் இருப்பதாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் சொல்லியிருப்பது வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள `நெற்றிக்கண்`. ஓடிடி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சமூகவலைதளங்களில் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ரசிகர்களீடம் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர், ‘’நயன்தாராவுக்கும் உங்களுக்கும் எப்போது திருமணம்?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விக்னேஷ் சிவன் அளித்த பதில்..

‘’திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்’’ என்று விக்னேஷ் சிவன் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து ஆறு வருடங்களாக இந்த நட்சத்திர ஜோடி காதலித்து வரும் நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :