• SPARKLES | மினுமினு

ஒரே ஒரு முத்தம்! பதவி பறிபோச்சு!


ஜி. கார்த்திகேயன்





பிரிட்டன் சுகாதாரத் துறை செயலர் மேட் ஹேன்காக் என்பவர் தன்னுடன் பணீயாற்றிய ஒரு பெண்ணை பொது இடத்தில் முத்தமிட்டு கொரோனா சமூக இடைவெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, பதவி விலகினார். இச்சம்பவம் பிரிட்டனில் புயலைக் கிளப்பி வருகிறது.

பிரிட்டன் சுகாதாரச் செயலராக இருந்த மேட் ஹேன்காக் அதே துறையில் பணியாற்றிய ஜீனா கோலன்டேஞ்சலோ என்ற பெண்ணை பொது இடத்தில் முத்தமிடும் புகைப்படத்தை ’’தி சன்’’ என்கிற பிரிட்டன் நாளிதழ் வெளியிட்டது. சுகாதார அமைச்சக அலுவலக வளாகத்தில் மே 6-ஆம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டதாக ’’தி சன்’’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. இருவருக்குமே வெவ்வேறு நபர்களுடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த நாளிதழில் இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து மேட் ஹேன்காக் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரு பொறூப்புள்ள அதிகாரி இப்படி பொது இடத்தில் முத்தம் கொடுத்தது கண்டிக்கப்பட வேண்டிய செயல். அவர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேட் ஹேன்காக்கின் மனைவி மனைவி மார்த்தாவும் தங்கள் 15 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் மேட் மேட் ஹேன்காக் தன் பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கொடுத்தார். அவரது பதவி விலகல் முடிவு தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் புதிய சுகாதாரச் செயலர் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

இந்நிலையில் மேட் ஹேன்காக் முத்தமிட்ட ஜீனாவும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘’எங்கள் இருவரின் ஒரேயொரு செயல் அலுவல கரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பொதுவாழ்விலும் எங்கள் இருவருக்கும் ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக என் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்’’ என்று மேட் ஹேன்காக் பிரதமருக்கு எழுதிய தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :