• TRENDING | பர பர

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த சீன விண்கலம்!





செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் கிடைத்த புதிய காட்சிகளை, சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சீனா கடந்த மாதம் 15-ம் தேதி சுரொங் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியது. ஆறு சக்கரங்களைக் கொண்ட அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் வட திசையிலுள்ள "உடோபியா பிளானிஷியா" என்கிற பெரிய நிலப்பரப்பில் தரையிறங்கியது. நடத்தியது.

இந்த 42 நாட்களில் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 236 மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் மற்றும் தண்ணீர் இருந்ததா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 90 நாட்களுக்கு இந்த ஆய்வுப் பணிகள் நடைபெறுவதாக சீனா தெரிவித்துள்ளது.

Twitter : https://twitter.com/i/status/1409020026619891712

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :