• TRENDING | பர பர

நடிகை வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி டான்ஸ் டூயட்: வைரல் வீடியோ!





விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களிலும் கலந்துக் கொண்ட நட்சத்திரங்களைக் கொண்டு, தற்போது ’’பிக் பாஸ் ஜோடிகள்’’ என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கு நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணனும், நடிகர் நகுலும் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சில வாரங்கள் ஒளிப்பரப்பான நிலையில், போட்டியாளர்களில் சிலரை கொரோனா தாக்கியதால் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஒளிப்பரப்பாகிறது.

போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சிகளில் நடிகை, வனிதா விஜயகுமார் ஜோடி இல்லாமல் தனியாக ஆடி வந்தார். இப்போது சுரேஷ் சக்ரவர்த்தி வனிதாவுக்கு ஜோடியாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களான ஆஜித் மற்றும் கேப்ரியலாவுக்கு சவாலாக போட்டி போட்டுகொண்டு ஆடுகின்றனர் வனிதாவும் சுரேஷ் சக்கரவர்த்தியும்! .

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter : https://twitter.com/i/status/1407647218115383301

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :