• SPARKLES | மினுமினு

வீடியோ கேமாக வருகிறது பிரபல ஹாலிவுட் திரைப்படம்!


- சாந்தி கார்த்திகேயன்





அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் 2003ம் ஆண்டில் தொடங்கி 2017ம் ஆண்டு வெளியான ` தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்` திரைப்படங்களுக்கு உலகெங்கும் மாபெரும் வெற்றி கிடைத்தது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் இப்படங்களின் ஹீரோவாக நடித்து உலகப் பிகழ்பெற்றார். உலகெங்கும் புகழ்பெற்ற ` தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்` படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு டிஸ்னி நிறுவனம் புதியதாக ஒரு ஆன்லைன் கேம் அறிமுகப் படுத்தவுள்ளது. இதற்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

.

‘தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்` படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் ஜேக் ஸ்பேரோ, தற்போது ஆன்லைன் கேம் உலகிலும் சாகசம்புரியவுள்ளார். டிஸ்னி நிறூவனமே இந்த ஆன்லைன் கேமை ` சீ ஆஃப் தீவ்ஸ் - ஏ பைரேட்ஸ் லைஃப்` எனும் பெயரில் உருவாக்கியுள்ளது. தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோவுடன் வலம் வந்த பார்போசா, ஜேம்ஸ் நோரிங்டன், பூட்ஸ் தீப்ஸ், கிப்ஸ் ஆகிய கதாபாத்திரங்களும் இந்த கேமிலும் இடம்பெற்றுள்ளன.படத்தில் வில்லனாக தோன்றிய டேவி ஜான்ஸ் கதாபாத்திரம், இதில் விளையாடுபவர்களை விரட்டும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வில்லனிடம் சிக்காமல் தப்ப வேண்டுமானால், இந்த கேமை விளையாடுபவர்கள் ஜேக்கின் அறிவுரைகளை கேட்க வேண்டுமாம்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்த வீடியோ கேம் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கேமின் முன்னோட்டத்திற்கே பெரும் வரவேற்பு அளித்துள்ள ரசிகர்கள், ஜேக் ஸ்பேரோவுக்காக காத்திருக்கின்றனர்.

Comments

T. Rathineswamy says :

திரைப்படத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். வீடியோ கேமை விளையாடக் காத்திருக்கிறோம். இந்த வீடியோ விளையாட்டைப் பற்றைய அழகான முன்னோட்டம் அருமை. - லதானந்த்

அனுராதா சேகர் says :

கடல் புதையல்,ஆழ் கடல் சாகசம்.,பிரபல க் கொள்ளையர்கள்,பேய்கள்,மர்ம திருப்பங்கள்.. டிஸ்னி கலக்குறியே..மச்சி.. முன்னோட்டம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது.

Jayanti Sundar Rajan says :

That would be really fascinating !

Dr R Parthasarathy says :

தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் நான் பார்த்ததில்லை, ஆனால், நான் பெரிதாக எதையோ மிஸ் செய்து விட்டேன் என்பதை மட்டும் உங்கள் அருமையான கட்டுரை எனக்கு உணர்த்துகிறது, அதே சமயம், அதுவே ஒரு மிகப் பெரிய ஆட்டமாக/ கேம்மாக, உருமாறி வரவிருக்கிறது என்ற உங்களுடைய இந்த் கட்டுரை, ஒரு அசாத்தியமான முன்னோட்டமாக திகழ்கிறது, சிறுவர்கள் மட்டுமல்லாது, பெரியவர்களின் ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது. வரவிருக்கும் கேட்டதெல்லாம், இக்கட்டுரையும், மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது, தரம் வாய்ந்த ஒரு ஆட்டத்திற்கு, ஓரு தரம் வாய்ந்த ஒரு டெரயிலர்/முன்னோட்டம். கல்கியின் வழியே ஓரு தனி வழி டாக்டர் பார்த்தசாரதி

G.Ravindran says :

Who can forget Johnny Depp`s portrayal of Captain Jack Sparrow in the Pirates of the Caribbean film series. Very clever foray by the makers in extending the `brand` into video games ! I am sure it will be a smash hit !!

raghavkumar says :

மிகவும் பயனுள்ள அதேசமயம் உலக அளவில் உள்ள தகவல் கள் இடம் பெற்றுஉள்ளது.

Sujatha Venkatakrishnan says :

I have watched both the movies. They have been made really well.The acting of Jack sparrow is very good. I am sure that the video game will also be a super hit like the movies.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :