• TRENDING | பர பர

சூர்யா- ஜோதிகாவுக்கு கொரோனா தடுப்பூசி: வைரல் போட்டோஸ்!





இந்தியாவில் கொரோனா 2-வது அலை. பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுபூசி ஒன்றே பாதுகாப்பு என்று வலியுறுத்தப் பட்டது. இந்நிலையில் கொரோனா 2-வது அலை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. எனினும் 3-வது அலை தோன்றக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. எனினும் மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளே அதற்கு காரணம். இதனிடையே அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யாவும் அவர் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தங்கள் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வைலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :