• JUST IN | சுட சுட

கலைஞர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: சட்டமன்றக் கூட்டத்தில் கோரிக்கை!





தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜூன் 21) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 3-நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் பேசியதாவது:

சென்னையில் பெருகி வரும் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். திருச்சியிலிருந்து மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் 4 மணி நேரத்தில் சென்றுவர முடியும். எனவே தமிழகத்தின் 2-வது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும். மேலும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

-இவ்வாறு இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

Comments

ற says :

கொடுக்கவேண்டும் இத்தனை நாள் கொடுத்திருக்க வேண்டும் யாருக்கு விருது கொடுப்பதாய் இருந்தாலும் அவரது சேவையை பாராட்டி உயிரோடு இருக்கும் போதே கொடுக்கப்படவேண்டும்

ஆா்.நாகராஜன் says :

கொடுக்கப்படவேண்டும் இத்தனை நாள் கொடுத்திருக்க வேண்டும் தகுதியானவாதான் அதே நேரம் யாருக்கு கொடுப்பதாய் இருந்தாலும் அவரது சேவையை பாராட்டி உயிரோடு இருக்கும் போதே கொடுத்திருக்க வேண்டும் ஆா் நாகராஜன் செம்பனாா்கோவில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :