• JUST IN | சுட சுட

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்: மத்திய அரசு ஆலோசனை!





நாடு முழுவதும் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கற்க வழிசெய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், பல மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது லேட்டாப் போன்ற வசதிகள் இல்லாததால், ஆன்லைனில் சரிவர கற்க முடிவதில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு மத்திய அரசின் சம்க்ரா சிக்‌ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பட்டியல் கிடைத்த உடன், மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :