• JUST IN | சுட சுட

6.72 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை: மத்திய அரசு!





சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று அனுப்பப்பட உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு மூலமாகவும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரம் 360 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 24 லட்சத்து 61 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று அனுப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 2.05 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் ஆகியவை அடங்கும். மேலும் நேற்று ஐதராபாத்திலிருந்து 2 லட்சத்து 21 ஆயிரத்து 90 கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :