• JUST IN | சுட சுட

50 நாட்களுக்குப் பின் அமைச்சர்கள் பட்டியல்: புதுச்சேரி முதல்வர் சமர்ப்பிப்பு!





புதுச்சேரியில் தேர்தலில் வென்று 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ரங்கசாமி இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார்.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலில் வென்று 50 நாட்களை கடந்த நிலையிலும் முதல்வர் ரங்கசாமியும், பேரவைத் தலைவராக செல்வமும் மட்டுமே பதவியேற்றனர். என்.ஆர்.காங்கிரசிலும், பாஜகவிலும் அமைச்சர்களை பிரிப்பதில் மோதல் ஏற்பட்டதால் அமைச்சர்கள் பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளிடையே சமரசம் ஏற்பட்டதால் என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு சபாநாயகர், மற்றும் 2 அமைச்சர்கள் என முடிவானது.

இந்நிலையில், இன்று (ஜூன் 23) காலை ராஜ்நிவாஸுக்கு முதல்வர் ரங்கசாமி சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து, புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார். இந்நிலையில் இந்த அமைச்சர்களின் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரபூர்வமன தகவல்கள் எதுவும் இன்னும் வெளீயாகவில்லை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :