• JUST IN | சுட சுட

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!





டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வருகிற ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை 32- வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 16 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஹாக்கி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவை பல ஆண்டுகளாக ஒலிம்பிக் மூலம் பெருமைப்படுத்திய வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இது விளையாட்டுத் துறையில் முன்னேற விரும்பும் மற்ற வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நம் நாடு பெருமிதம் கொள்கிறது. இந்த வீரரகளை மனதார பாராட்டுகிறேன். இன்னும் சில வாரங்களில் டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகிறது, எனவே நமது இந்தியக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

- இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :