• TRENDING | பர பர

நீங்க பூமிக்கு வரவே வேண்டாம்: அமேசான் நிறுவனரைக் கதறவிட்ட நெட்டிசன்கள்





அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சில தினங்களுக்கு முன்பு விண்வெளிக்கு செல்லப் போவதாகக் கூறியிருந்த நிலையில், அவர் பூமிக்கு திரும்பவே கூடாது என்று சமூக வலைதளங்களில் பலரும் மனுக்களை எழுத ஆரம்பித்து விட்டனர்.

சமூக வலைதளங்களில், ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு எதிராக பெட்டிசன்கள் போடுவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்!. அந்த வகையில் ஜெஃப் பூமிக்கு திரும்பி வரவே வேண்டாம். விண்ணிலேயேணீருந்து கொள்ளட்டும் என்று எழுதப்பட்ட இரண்டு மனுக்களை 56 ஆயிரம் பேர் ஆதரித்துள்ளனர்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டம் ஒன்றை துவங்கியுள்ளது ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனம். இதில் தானும், தன்னுடைய சகோதரர் மார்க் பெசோஸூம் விண்ணுக்கு செல்வதாக ஜூன் 7-ம் தேதி அறிவித்திருந்தார் அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ். இவர்களை அழைத்துக் கொண்டு செல்லும் விண்கலம் ஜூலை 20-ம் தேதி விண்ணில் பாய்கிறது.

`பணக்காரர்கள் பூமியில் வாழமாட்டார்கள். விண்வெளியிலும் வாழ மாட்டார்கள். ஆனால் அவர்கள் விண்வெளியை தேர்வு செய்து அங்கே இருப்பது தான் நல்லது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பலரும் இந்த மனுக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து இதற்கு ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :