• JUST IN | சுட சுட

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : ஜூலை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!





மத்திய அர்சு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ஜூலை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தையும் எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். நேற்றுத் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :