• JUST IN | சுட சுட

கொரோனா எதிரொலி: அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டும் ரத்து!





இந்தியாவில் சுமார் 5000 ஆண்டுகள் பழைமையான அமர்நாத் குகைக்கோயிலுக்கு, ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வருகை தந்து இந்த பனிலிங்க வடிவிலான சிவபெருமானை வழிபடுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்வதாக ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. ஆனால் கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள், பூஜைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என அமர்நாத யாத்திரை வாரியம் தெரிவித்துள்ளது.

அமர்நாத ஆலய வாரியத்துடன் கலந்துரையாடிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்த முடிவை அறிவித்தார். இருப்பினும், பக்தர்கள் ஆன்லைனில் "ஆரத்தி" தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை என்பது 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்த பனிலிங்க குகைக் கோயிலுக்கு 56 நாள் மேற்கொள்ளும் யாத்திரையாகும். கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :