• JUST IN | சுட சுட

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!





தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியிலும் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரிலும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :