• தினம் ஒரு கூட்டு

கேரட் - மூங்தால் கூட்டு


-- ஆர். மீனலதா, மும்பை

தேவையானவை:

பெரிய கேரட் - 5,

தேங்காய்ப் பூ ஃப்ரெஷ் - 1 கப்,

பாசிப் பருப்பு - அரை கப்,

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 4 (காம்பு நீக்கியது),

இஞ்சி - 1 சிறுதுண்டு,

தக்காளிப் பழம் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையானது,

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

கொத்துமல்லி - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் கேரட் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை நன்றாக களைந்து கேரட்டுடன் சேர்த்து மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து, போதுமான தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வேக வைக்கவும்.

தேங்காய்ப்பூ, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவைகளை மிக்ஸியிலிட்டு அரைத்தெடுத்து, வெந்த கேரட் - பருப்புடன் கலந்து கொதிக்க விடவும். எல்லாம் மிக்ஸ் ஆகி கெட்டியாகும். கீழே இறக்கி வைக்கவும்.

தேங்காய் எண்ணெயைச் சுட வைத்து, கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு தாளிதம் செய்து கெட்டியான கூடல் போட்டு தக்காளி + கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். சுவையான சத்தான கேரட் கூட்டு சாப்பாடு, சப்பாத்திக்கு ஏற்றது. ஹெல்த்தியானது.

Comments

G.usha says :

Very tasty and healthy

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :