• தினம் ஒரு கூட்டு

பச்சை பட்டாணி கூட்டு


- உஷாமுத்துராமன், மதுரை.

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - ஒரு கப்

தக்காளி - ஒன்று

உருளைக்கிழங்கு -1

உப்பு காரப்பொடி பெருங்காயப் பொடி - தேவைக்கேற்ப

கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி – தாளிக்க.

செய்முறை –

பட்டாணியை இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஊறிய பட்டாணியுடன் உருளை கிழங்கை சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் வெந்த பட்டாணி உருளை கிழங்குடன் தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் உப்பு கார பொடி சேர்தக்கவும். இந்த கலவை கூட்டு பதத்துக்கு நன்றாக கொதித்த பின் இறக்கி வைத்து அதில் கடுகு பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான “பச்சை பட்டாணி கூட்டு” தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :